கணினித் தமிழ்

கணினியில் தமிழ் – இனி எளிது! தமிழில் ஒரு மின்னஞ்சல் எழுத வேண்டும், ஆனால் விசைப்பலகை ஒத்துழைக்கவில்லை. ஒரு PDF-ஐத் திறந்தால் எழுத்துகள் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன. பழைய எழுத்துருவில் உள்ள கோப்பை இன்றைய உலாவியில் படிக்க முடியவில்லை. இவை நம்மில் பலர் எதிர்கொண்ட சிக்கல்கள். இவற்றுக்குத் தீர்வு தர உருவாக்கப்பட்டதே கணினித் தமிழ் . கருவிகளைப் பயன்படுத்து இந்தத் தளம் ஏன்? தமிழ் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று. ஆனால் இணையத்தில் அதைப் பயன்படுத்தும்போது இன்றும் தடைகள் உள்ளன. எந்தச் செயலியில் எப்படித் தட்டச்சு செய்வது, எந்தக் கருவி நம்பகமானது என்பது புரியாமல் பலர் குழம்புகிறார்கள். தேவையான கருவிகளை ஓரிடத்தில் திரட்டித் தருவதே எங்கள் நோக்கம். இது வணிக நோக்கமற்ற முயற்சி . மாணவர், ஆசிரியர், எழுத்தாளர், அலுவலகப் பணியாளர், முதியோர் என இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தமிழில் எளிதாக இயங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இங்கே என்னென்ன கருவிகள்? 🎤 தமிழ் குரல் தட்டச்சு பேசினால் எழுத்தாக மாறும். தட்டச்சு தெரியாதவர்களுக்கும் எளிய வழி. ⌨️ ஒலிபெயர்ப்பு vanakkam என்று எழுதினால் வணக்கம...