கணினித் தமிழ்

கணினியில் தமிழ் – இனி எளிது!

தமிழில் ஒரு மின்னஞ்சல் எழுத வேண்டும், ஆனால் விசைப்பலகை ஒத்துழைக்கவில்லை. ஒரு PDF-ஐத் திறந்தால் எழுத்துகள் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன. பழைய எழுத்துருவில் உள்ள கோப்பை இன்றைய உலாவியில் படிக்க முடியவில்லை. இவை நம்மில் பலர் எதிர்கொண்ட சிக்கல்கள். இவற்றுக்குத் தீர்வு தர உருவாக்கப்பட்டதே கணினித் தமிழ்.

கருவிகளைப் பயன்படுத்து

இந்தத் தளம் ஏன்?

தமிழ் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று. ஆனால் இணையத்தில் அதைப் பயன்படுத்தும்போது இன்றும் தடைகள் உள்ளன. எந்தச் செயலியில் எப்படித் தட்டச்சு செய்வது, எந்தக் கருவி நம்பகமானது என்பது புரியாமல் பலர் குழம்புகிறார்கள். தேவையான கருவிகளை ஓரிடத்தில் திரட்டித் தருவதே எங்கள் நோக்கம்.

இது வணிக நோக்கமற்ற முயற்சி. மாணவர், ஆசிரியர், எழுத்தாளர், அலுவலகப் பணியாளர், முதியோர் என இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தமிழில் எளிதாக இயங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

இங்கே என்னென்ன கருவிகள்?

🎤 தமிழ் குரல் தட்டச்சுபேசினால் எழுத்தாக மாறும். தட்டச்சு தெரியாதவர்களுக்கும் எளிய வழி.
⌨️ ஒலிபெயர்ப்புvanakkam என்று எழுதினால் வணக்கம் என்று மாறும்.
🌐 மொழிபெயர்ப்புஆங்கிலம் ↔ தமிழ் மொழிபெயர்ப்புக்கான விரைவு வழி.
✅ பிழைதிருத்திஎழுத்து, இடைவெளி, நிறுத்தக்குறிப் பிழைகளைச் சரிசெய்ய.
🔁 ஒருங்குறி மாற்றிபழைய எழுத்துரு உரைகளை யூனிகோடாக மாற்ற. (விரைவில்)
🎹 தமிழ் விசைப்பலகைகணினியிலும் கைப்பேசியிலும் தமிழ் எழுத வழிகாட்டி. (விரைவில்)
🔍 தமிழ் OCRபடங்கள், ஸ்கேன் பக்கங்களிலிருந்து தமிழ் உரையை எடுக்க. (விரைவில்)
📄 PDF to Word & PDF கருவிகள்இணைத்தல், பிரித்தல், மாற்றுதல். (விரைவில்)

ஒவ்வொரு கருவிக்கும் தனிப் பக்கம் உண்டு. அதில் பயன்படுத்தும் முறையும் எளிய விளக்கமும் இருக்கும்.

யாருக்கு இது பயன்படும்?

  • தமிழில் ஆய்வுக்கட்டுரை, கடிதம், பதிவு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள்
  • வலைப்பூ, சமூக ஊடகம், புத்தகம் எழுதும் எழுத்தாளர்கள்
  • அலுவலக ஆவணங்களைத் தமிழில் தயாரிக்கும் பணியாளர்கள்
  • தட்டச்சில் வேகம் இல்லாததால் பேசியே எழுத விரும்பும் அனைவரும்

எங்கள் உறுதி

தமிழ் இணையத்தில் நிலைத்து வளர வேண்டும் என்பதற்காகவே இந்தத் தளம். கருவிகளை எளிமையாகவும் தெளிவாகவும் தருவதே எங்கள் நோக்கம். உங்கள் கருத்துகள், குறைகள், புதிய கருவிக்கான யோசனைகள் எல்லாம் இதை மேம்படுத்த உதவும்.

கீழே உள்ள கருவிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தொடங்குங்கள். தமிழில் தட்டச்சு செய்வது இனி சிரமமில்லை!